சென்னை: திமுக சார்பாக வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் விருப்ப மனு தாக்கல்செய்துள்ளனர்.
இச்சூழலில், நேற்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூர் காட்பாடி தொகுதியில் 6ஆவது முறையாகப் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல்செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களம் திமுகவிற்கு சாதகமாக உள்ளது. கருத்துக்கணிப்புகள் நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற சாத்தியம்" எனத் தெரிவித்தார்.