ETV Bharat / city

போதைப் பொருள் விற்பனை - 3 மாதங்களில் 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது - தாம்பரம் காவல் ஆணையர் ரவி மாணவர்கள் இடையே உரையாற்றினார்.

கடந்த மூன்று மாதங்களில் போதைப் பொருள் விற்பனை செய்த 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் விற்பனை - 3 மாதங்களில் 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

author img

By

Published : Apr 30, 2022, 12:10 PM IST

Updated : Apr 30, 2022, 2:11 PM IST

சென்னை: தாம்பரம் சேலையூர் தனியார் பள்ளியில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி மாணவர்கள் இடையே உரையாற்றினார். "உழைப்பிற்க்கும் கடின உழைப்பிற்கும் உள்ள வித்தியாசமே முதன்மையான மாணவர்களாக உங்களை மாற்றும்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மதிப்பெண்களுக்காக உங்களை ஓட சொன்னாலும் நீங்கள் புரிந்து படியுங்கள். அது உங்களுக்கு மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு நாள் 1200 பக்கங்கள் படித்தாலும் புரிந்து படிக்கவில்லை என்றால் எந்த பயனும் இல்லை, நீங்கள் படித்ததை பயப்படாமல் எழுதுங்கள். ஒழுக்கத்தையும் கற்று கொள்ளுங்கள். ஒழுக்கத்தை கற்காமல் என்ன பயின்றாலும் அது பயனற்று போகும்" என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, "மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்தாலும் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது தைரியமாக இருக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் இருக்கிறாதா என்பதை குழுக்கள் அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் கடந்த 15 நாட்களில் அதிக அளவில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளோம்.

போதைப் பொருள் விற்பனை - 3 மாதங்களில் 67 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

தாம்பரம் ஆனையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படும். அது மட்டுமில்லாமல் சாக்லேட் வடிவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வந்தன. அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் குட்கா போதை பொருட்களின் விற்பனை தடுக்கும் வகையில் சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 67 ரவுடிகளின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலையூரில் சிற்றுண்டி கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது!

Last Updated : Apr 30, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.