தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மே 21ஆம் தேதி 36 ஆயிரத்து 184 ஆக இருந்த கரோனா பாதிப்பு ஒரு வார காலத்திற்குள் அதாவது மே 29ஆம் தேதி 30 ஆயிரத்து 16 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பை தடுக்க தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், "இந்தியாவில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மராட்டியத்தில் தொடங்கி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம் ஆகிய கடலோர மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறிப்பிடும்படியாக இல்லை!
பெங்களூருடன் ஒப்பிடும் போது சென்னையில் கரோனா விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஊரடங்கும் ஒரு காரணம். இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், அலுவலர்களுக்கும் பாராட்டுகள். தொடர்ந்து விழிப்பாக பணியாற்ற வேண்டியதும் அவசியமாகும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி