ETV Bharat / city

கவுரவ பணி நியமனங்கள் மூலம் மருத்துவக் கல்லூரிகளை தனியார்மயமாக்கத் திட்டம்!

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கவுரவ பேராசிரியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

union
union
author img

By

Published : Dec 26, 2019, 6:20 PM IST

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் சாந்தி ஆகியோர், “அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி நியமனம் என்பது ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. அனுபவம், பணிமூப்பு அடிப்படையிலும் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஆனால், தற்போது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள ஆணையில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு மூலம் தற்காலிகமாக கவுரவ பேராசிரியர்களை நியமனம் செய்துகொள்ளவும் அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கான சம்பளம் குறித்து அக்குழுவே முடிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

ஏராளமான அரசு மருத்துவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இந்தச் சூழலில், வெளியில் உள்ள மருத்துவர்களையும், ஓய்வுபெற்றவர்களையும் பேராசிரியர்களாக கவுரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முயல்கிறது. இது ஏற்கெனவே நீண்டகாலமாக அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் எதிரானது.

எம்.ஆர்.பி. என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அமைப்பை உருவாக்கிவிட்டு, அதன்மூலம் மருத்துவர்களை நியமிக்காமல் நேரடியாக கவுரவ அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஊழலுக்கும் முறைகேட்டிற்குமே வழிவகுக்கும். அரசுப்பணிக்கு, குறைந்த ஊதியத்தில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டும் நோக்கமும் இத்தகைய பணி நியமனங்களில் அடங்கியுள்ளது.

இப்பணி நியமனங்கள் மூலம் தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களைக் கூட்டாமல், இந்திய மருத்துவக் கவுன்சில் கூறிய குறைந்தபட்ச மருத்துவர்கள் ஆணையின் மூலம், சுமார் 800 பணியிடங்களை தமிழ்நாடு அரசு ஒழித்துக் கட்டியுள்ளது. இந்த ஆள்குறைப்பு ஆணையை ரத்து செய்யாமல், இந்தப் பணிநியமனம் என்பது, வேலைவாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்.

இப்பணி நியமனங்களை கல்லூரிகளே மேற்கொள்வதால், 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பாதிக்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களையும் இவ்வாறு பணிநியமனம் செய்யும் வாய்ப்புள்ளது. கவுரவ மருத்துவப் பேராசிரியர்களுக்கு, ஒரு நிரந்தர மருத்துவருக்கு உரிய பொறுப்புகள் இருக்காது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். சேவைத் தரமும் பாதிக்கும்.

கவுரவப் பணி நியமனம் ஊழலுக்கும், முறைகேட்டுக்குமே வழி வகுக்கும் - மருத்துவர் ரவீந்திரநாத்

எனவே, உலக வங்கியின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாடு அரசு கவுரவ பேராசிரியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும்.

மேலும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வரும் நிதியிலிருந்தே மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முறைகேடு நடக்கிறது. தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தால் மேலும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடைபெறும்” எனக் கூறினர்.

இதையும் படிங்க: நல்லாட்சிக் குறியீட்டில் தமிழகம் முதலிடம்! - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்

Intro:கவுரவ விரிவுரையாளர் நியமிக்க கூடாது

மருத்துவ சங்கம் எதிர்ப்புBody:கவுரவ விரிவுரையாளர் நியமிக்க கூடாது

மருத்துவ சங்கம் எதிர்ப்பு
சென்னை,

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கவுரவ அடிப்படையில் பேராசிரியர்கள் பணிநியமனம் செய்வதை கைவிட வேண்டும் எனவும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது என
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத்,மாநில செயலாளர் சாந்தி,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் பணிநியமனம் என்பது கவுன்சிலிங் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகிறது.

பணி அனுபவமும் ,பணி மூப்பு அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஆனால் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள ஆணையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் மூன்று பேர் கொண்ட குழு மூலம் ,தற்காலிகமாக கவுரவப் பேராசிரியர் பணிநியமனம் செய்து கொள்ளவும்,அவ்வாறு நியமிக்கப்பட உள்ள பேராசிரியர்களுக்கு அக்குழுவே எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த செயல்கடும் கண்டனத்திற்குரியது.

சென்ற அக்டோபர் மாதம் ,நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எம்சிஐ விதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 8 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.

அந்தப் போராட்டத்தை நசுக்கியதோடு,அவர்களின் கோரிக்கைகளையும் அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

இன்னும் சொல்லப்போனால்,
போராடிய மருத்துவர்களை பழிவாங்கும் நோக்குடன் இடமாறுதல் செய்ததுடன்,
மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள்,இணைப் பேராசிரியர்களை ,மாவட்ட மருத்துவமனைகளுக்கும்,வட்டார மருத்துவமனைகளுக்கும் இட மாறுதல் செய்து,ஆட் குறைப்பு செய்தது.

ஏராளமான அரசு மருத்துவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் இந்த நிலையில்,அவர்களை விடுத்து, வெளியில் உள்ள மருத்துவர்களையும்,ஓய்வு பெற்றவர்களையும் பேராசிரியர்களாக கவுரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழக அரசு முயல்கிறது.

இது ஏற்கனவே நீண்ட காலமாக அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்களின் நலன்களுக்கும்,
உரிமைகளுக்கும் எதிரானது.

தற்பொழுது,பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்புள்ள, இணைப் பேராசிரியர்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பணியில் நீண்டகாலமாக உள்ள அரசு மருத்துவ இணைப்
பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓய்வு பெற்றவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது ,இணைப் பேராசிரியர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

எம்.ஆர்.பி. என்ற மருத்துவப் பணியாளர் தேர்வாணைய அமைப்பை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் மருத்துவர்களை நியமிக்காமல் ,நேரடியாக கவுரவ அடிப்படையில் பணி நியமனம் செய்வது ஊழல்களுக்கும் ,
முறைகேடுகளுக்கும் வழி வகுக்கும்.

அரசுப்பணிக்கு, குறைந்த ஊதியத்தில் மருத்துவர்களை நியமிக்கும் நோக்கமும்,அவர்களின் உழைப்பு சக்தியை சுரண்டும் நோக்கமும் இத்தகைய பணிநியமனங்களில் அடங்கியுள்ளது.

இப்பணி நியமனம் மூலம் தமிழக அரசு, தனது மருத்துவக் கல்லூரிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஏற்கனவே ,
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் பணியிடங்களை கூட்டாமல், இந்திய மருத்துவ கவுன்சில் கூறிய குறைந்த பட்ச மருத்துவர்கள் ஆணையின் மூலம் ,சுமார் 800 பணியிடங்களை தமிழக அரசு ஒழித்துக் கட்டியுள்ளது. இந்த ஆட்குறைப்பு ஆணையை ரத்து செய்யாமல்,
இந்த கவுரவ மருத்துவர்கள் பணிநியமனம் என்பது, வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்.

இப்பணி நியமனங்களை கல்லூரிகளே மேற்கொள்வதால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படும். மேலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பாதிக்கப்படும்.

வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்களையும் இவ்வாறு பணிநியமனம் செய்யும் வாய்ப்புள்ளது.

இது நமது இளம் மருத்துவர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும்.

கவுரவ மருத்துவப் பேராசிரியர்களுக்கு, ஒரு நிரந்தர மருத்துவருக்கு உடைய பொறுப்புகள் இருக்காது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

கவுரவ மருத்துவர்கள் பணி நியமனம் ,அரசு மருத்துவ மனைகளின் கட்டமைப்பை சீர் குலைத்துவிடும்.சேவைத் தரத்தை பாதிக்கும்.

எனவே,
உலக வங்கியின் நிர்பந்தத்திற்கு அடி பணிந்து,தமிழக அரசு கவுரவ மருத்துவர்களை நியமிப்பதை கைவிட வேண்டும்.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வரும் நிதியில் இருந்தே மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் முறை கேட்டில் ஈடுபடுகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தால் மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடைபெறும் என கூறினார்.Conclusion:Viduvaal

3 G live pack
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.