ETV Bharat / city

மருத்துவக் கல்வியில் போலி அறிவியலை திணிக்க முயற்சி - மருத்துவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

author img

By

Published : Aug 4, 2020, 7:55 PM IST

சென்னை: தேசிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு மருத்துவக் கல்வியில் போலி அறிவியலை திணிக்க முயற்சிப்பதாக மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

union
union

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள காணொலியில், ” ’தேசிய கல்விக் கொள்கை 2020’ மூலம், குலக்கல்வி திட்டத்தையும், சாதி அடிப்படையிலான பரம்பரை தொழில்களை கொண்டு வரவும் மத்திய அரசு முயல்கிறது. இது நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது.

மேலும், மும்மொழி திட்டத்தை கட்டாயப்படுத்தி, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழி வகுக்கிறது. இந்தியாவை இந்து நாடாக மாற்றும் நோக்குடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்விக் கொள்கை, அறிவியல் மனப்பான்மையை ஊக்கப்படுத்துவதற்கு எதிராகவும், அறிவியல் ரீதியான உலகப் பார்வையை உருவாக்குவதற்கு எதிராகவும் உள்ளது. இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில், போலி மருத்துவ அறிவியலை, அறிவியல் ரீதியாக காலாவதியான மருத்துவக் கோட்பாடுகளை திணிப்பதற்கு முயல்கிறது.

அதோடு, அலோபதி மருத்துவ மாணவர்கள் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளின் அடிப்படை புரிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிறது இக்கொள்கை. இத்தகைய ஒன்றிணைக்கும் போக்கு, மோசமான விளைவுகளை மருத்துவக் கல்வியில் உருவாக்கும். மருத்துவ சேவையின் தரமும் பாதிக்கும்.

மருத்துவக்கல்வியில் போலி அறிவியலை திணிக்க முயற்சி - மருத்துவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்றும், அதன் கோட்பாடுகள் அறிவியல் அடிப்படைகளற்றது, மருத்துவ ரீதியாக பயனற்றது எனவும் பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே, ஹோமியோபதி தவிர, இதர `ஆயுஷ்’ மருத்துவ முறைகளின், ஏற்கத்தக்கவற்றை மட்டும், நவீன அறிவியல் தொழில் நுட்ப அடிப்படையில் வளர்த்தெடுக்கலாம்.

ஆனால், ஆயுஷ் மருத்துவத்தை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைப்பது என்பது அறிவார்ந்த செயல். அது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று. இந்தியாவில் அடிப்படை மருத்துவ படிப்பாக எம்பிபிஸ் மட்டுமே இருக்க வேண்டும். பிறகு ஆயுஷ் படிப்பை முதுநிலையில் படிக்கும் நிலையை உருவாக்கலாம். அதுவே மருத்துவ அறிவியலின் வளர்ச்சிக்கு உதவும்.

மேலும், இக்கல்வி கொள்கை, மருத்துவக் கல்வியை மேலும் தனியார் மய, கார்ப்பரேட் மயமாக்குகிறது. எனவே, சமூக நீதிக்கு எதிராக உள்ள இந்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை உலகத் தரத்திலான கல்வியை வழங்கும் - பாஜக தலைவர் முருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.