ETV Bharat / city

”தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்”- தமிழ்நாடு மருத்துவர்கள் போராட்டம்

சென்னை: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவர்கள்
author img

By

Published : Jul 31, 2019, 10:44 PM IST

மருத்துவக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா என்ற புதிய மசோதாவைக் கடந்த திங்கள் கிழமை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்திய மருத்துவ கழகத்தைக் கலைத்து தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும் மற்றும் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தன. இந்த மசோதாவிற்கு மருத்துவத் துறையினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இம்மசோதாவை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ சங்கத்தின் அறிவிப்பை ஏற்று தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்: அனுபவமில்லாத மருத்துவர்களை மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்தும் இந்த ஆணையத்தை எதிர்ப்பதாகக் கூறி சேலம் இந்திய மருத்துவ சங்க அலுவலக வளாகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு மசோதாவை திரும்ப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சேலத்தில் நடந்த போராட்டம்

திருவாரூர்: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கும், நெக்ஸ்ட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு 300க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மருத்துவ மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர்: மத்திய அரசு முன்வைத்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்போதுள்ள மருத்துவர்களும் , மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்படுவர் எனவும், மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், மாணவர்களின் மருத்துவக் கனவை கலைக்கக் கூடிய நீட் , நெக்ஸ்ட் தேர்வுகளை நீக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்கிளை சார்பில் 150க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் நடந்த போராட்டம்

தென்காசி: மத்திய அரசு நிறைவேற்றிய இந்த மசோதாவால் பல போலி மருத்துவர்கள் உருவாக வழிவகுக்கும் என்பதால் மசோதாவை நீக்க வேண்டும் எனக் கூறி குற்றாலம் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தென்காசி கோட்டாட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

தென்காசியில் நடந்த போராட்டம்

நாமக்கல்: இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளையைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்களில் கருப்பு நிற துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்தினர்.

நாமக்கல் கிளையினர் நடத்திய போராட்டம்
நாமக்கல் கிளையினர் நடத்திய போராட்டம்

வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றாலும் அவசரகால மருத்துவ சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:இந்திய மருத்துவ ஆணையத்தை திரும்பபெறவேண்டும் எனவும் நெக்ஸ்ட் தேர்வை ரத்துசெய்யவேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கத்தினர் வாயில் கருப்பு துணி அணிந்து போராட்டம்

Body:தேசிய மருத்துவ ஆணயைத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்று முடிவெடுத்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் 24 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்திய மருத்துவ சங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் ரெங்கநாதன் கூறுகையில் தேசிய மருத்துவ ஆணயைத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 24 மணி நேரத்திற்கு புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்று போராட்டத்தில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மருத்துவ படிப்பை கற்றோர் மட்டுமல்லாமல் வேறு மருத்துவ பிரிவுகளில் உள்ளவர்கள் மருத்துவராக பணி செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாயில் கருப்பு துணி கட்டியும் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.மேலும் அவசரசிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் தவிர ஏனைய மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் இதற்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காணவிட்டால் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.மருத்துவர்களின் இப்போராட்டத்தால் சுமார் 1000க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.