சென்னை: தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக்கை இன்று (டிச.23) அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், சீமான் போன்றவர்களால் எம்ஜிஆர், புகழை அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வார்கள் என்று கூறினார்.
வருகின்ற 27ஆம் தேதி பொதுக்கூட்டத்தில், கூட்டணிக்கட்சியான பாமக பங்கேற்குமா என்கிற கேள்விக்கு, அதுகுறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்; அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.
இதையும் படிங்க: புதிய வகை கரோனா: மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை