சென்னை: பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சில மாதங்களாக கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மாணவிக்கு பரிசோதனை செய்த எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் சீனிவாசன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: சசிகலாவுடன் சந்திப்பு - கட்சியில் இருந்து தம்பியை நீக்கிய அண்ணன்