ETV Bharat / city

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பு - obc reservation in medical seats

மருத்துவக் கல்வியில் ஒன்றிய அரசு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மருத்துவப் படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பு

author img

By

Published : Jul 30, 2021, 3:54 PM IST

Updated : Jul 30, 2021, 5:23 PM IST

சென்னை: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், "2007ஆம் ஆண்டு ஓபிசி பிரிவினருக்கு ஒன்றிய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறிவித்த நிலையில், அது 2008ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டுவருகிறது.

இந்த இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் மட்டும் ஓபிசி பிரிவினருக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டுவந்த நிலையில், சுமார் 16 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பு

ஏற்கனவே நடைமுறையில் இருப்பதுபோல இந்த ஆண்டும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு அந்தந்த மாநிலங்களில் நடத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.

இதையும் படிங்க: பாலியல் புகார்: மணிகண்டனின் மனுவுக்கு நடிகை சாந்தினி பதிலளிக்க உத்தரவு

Last Updated : Jul 30, 2021, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.