ETV Bharat / city

இரு நாட்களுக்கு சென்னை திரும்ப வேண்டாம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Nov 7, 2021, 7:43 PM IST

Updated : Nov 7, 2021, 8:40 PM IST

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்
கனமழை பாதிப்புகளை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை செய்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீ மழையும், அரியலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், அக். 01 முதல் நவ. 07 வரையில் 334.64 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 232.8 மி.மீட்டரை விட 44 விழுக்காடு கூடுதல் ஆகும் .

சென்னை நகரில் குறிப்பாக மிக அதிக அளவு மழை பதிவாகி பெய்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று நவ. 07ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், செல்வி நகர், சீனிவாசா நகர், பெரம்பூர், பெருமாள்பேட்டை, வல்லம் பங்காரு தெரு, புரசைவாக்கம், மூக்கு செட்டி தெரு, கொசப்பேட்டை, படவட்டமன் தெரு, ஓட்டேரி, கொன்னூர், அன்னை சத்யா நகர் உள்ளிட்டப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

கே.ஆர்.எம். பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரொட்டி, அரிசி, போர்வை, சோப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கூடுதலாக 60% மழை

கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இயல்பை விட 60 விழுக்காட்டிற்கும் மேல், மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், ஏனைய அனைத்து மாவட்டங்களில் 5,106 நிவாரண முகாம்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படை வருகை

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

மேலும், பேரிடர்களின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் மதுரைக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை விரைவு

மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தமிழ்நாடு தீயணைப்புத் துறையும், அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர். மீன்வளத்துறை மூலம் போதுமான படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று நவ. 07ஆம் தேதி, சென்னையின் தாழ்வானப் பகுதிகளிலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக, சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்காத வண்ணம் வருவாய்த் துறை , பொதுப்பணித் துறை , உள்ளாட்சித் துறை அமைப்புகள் மூலம் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார் .

கரோனா வழிகாட்டு நடைமுறைகள்

தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, உடனடியாக பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான இதர வசதிகளைச் செய்து தரவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லா இடங்களிலும் உரிய மருத்துவ வசதிகள் கிடைப்பதையும், கரோனா வழிகாட்டு நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.

கட்டணமில்லா தொலைபேசி எண் - 1070

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்திய முதலமைச்சர்

பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில், மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாடு விவரங்களைக் கேட்டறிந்தார்.

கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை இயக்குநர் என்.சுப்பையன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும்; கட்டணமில்லா தொலைபேசி 1070 மூலம் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள்.

கனமழை தொடரும் - இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் தொடர்ந்து, பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையிலும், 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 134.29 மி.மீ மழை

இரு நாட்களுக்கு சென்னைக்கு திரும்பவேண்டாம்

தற்போது சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதாலும், தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றுள்ள பொது மக்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறும், முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மிதக்கும் சென்னை: மீண்டும் ஒன்றிணைய வரும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு

Last Updated : Nov 7, 2021, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.