ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு - திமுக மகளிரணி

சென்னை: ஜெ.ஜெ. நகரில் திமுக மகளிரணி சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

protest
protest
author img

By

Published : Dec 30, 2019, 1:35 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகரில் நேற்று கோலம் வரைந்த 6 பெண்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கும் பதிந்தனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காவல் துறையின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, மகளிரணியினர் அனைவரும் தங்கள் வீடுகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் வரைந்து எதிர்ப்பை பதிவு செய்யும்படியும் அழைப்பு விடுத்திருந்தார்.

’NO CAA; NO NRC'-  கனிமொழி அழைப்பு’NO CAA; NO NRC'- கனிமொழி அழைப்பு

அதன்படி, கனிமொழியின் சென்னை, தூத்துக்குடி இல்லங்களின் வாசல்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டம் - கனிமொழி இல்லத்தில் எதிர்ப்புக் கோலம்

சென்னை ஜெ.ஜெ. நகரில் திமுக மகளிரணி சார்பாக, வளையாபதி சாலை முழுவதும் ’ NO CAA, NO NRC ‘ எனக் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதில் அப்பகுதி பெண்களும் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

’NO CAA; NO NRC'- திமுக மகளிரணி கோலப் போராட்டம்

இதேபோல், சென்னையிலுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லங்களிலும் கோலம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!

Intro:Body:சென்னையில் திமுக மகளிர் அணி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து ஆர்பாட்டம்

சென்னை ஜெ.ஜெ நகரில் திமுக மகளிர் அணி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் பெசண்ட் நகரில் கோலம் வரைந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறை கைது செய்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி மகளிர் அணி சார்பாக அனைவரும் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை பதவி செய்யும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை ஜெ.ஜெ நகரில் பகுதி செயலாளர் டி.எஸ்.பி.இராஜகோபால், மகளிர் பகுதி அமைப்பாளர்கள் அருள்செல்வி, சுகந்தி ஆகியோர் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பாக வளையாபதி சாலை முழுவதும் கோலம் வரைந்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.