ETV Bharat / city

’8 மாதத்தில் திமுக ஆட்சி’ - மு.க.ஸ்டாலின் சூளுரை - திமுக பொதுக்குழு

சென்னை: அடுத்த எட்டு மாதங்களில் திமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Sep 9, 2020, 8:59 PM IST

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் முறைப்படி அறிவிக்கப்பட்டனர்.

கட்சி விதிகளில் திருத்தம் செய்தபின் கூடுதல் துணைப்பொதுச்செயலாளர்களாக க.பொன்முடியும், ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காணொலி வாயிலாக சுமார் 3,500 பேர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ” திமுகவின் பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு எனும் வரலாற்று நிகழ்வு, மிக பிரமாண்டமாக மாநாடு போல் நடந்திருக்க வேண்டும். கரோனாவால் அதை நிகழ்த்த முடியாமல் காணொலி வாயிலாக நடத்த வேண்டியதாயிற்று.

திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும், தலைவராக நான் இருக்கும்போது தேர்வாகியிருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்நேரம் கருணாநிதி இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

அடுத்த எட்டு மாதங்களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்கும்

திமுகவில் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டி, பிளவு என்று ஊடகங்கள் தொடர் செய்திகள் வெளியிட்டன.

பொதுவாக ஊடகங்களில் ஆளுங்கட்சியை பற்றித்தான் அதிகமாக எழுதுவார்கள். ஆனால், தமிழ்நாட்டு ஊடகங்கள் திமுக பற்றியே எழுதி வருகின்றன.

ஒருவேளை திமுகதான் ஆளுங்கட்சியாக இருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கவலை வேண்டாம். அடுத்த எட்டு மாதங்களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்கும்.

’8 மாதத்தில் திமுக ஆட்சி’ - மு.க.ஸ்டாலின் சூளுரை

தேர்தல் நெருங்கி வருகிறது. உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும். கரோனாவால் ஐந்து மாதங்களை இழந்துவிட்டோம்.

அதற்கும் சேர்த்து தற்போது வேலை செய்ய வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு எந்தளவிற்கு பின்தங்கி போயுள்ளது என்பது பற்றி மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.

அனைவருக்கும் ஒரே இலக்குதான் இருக்க வேண்டும். அது மீண்டும் திமுக ஆட்சி என்றுதான் இருக்க வேண்டும் “ என்று கூறினார்.

பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் ஸ்டாலின், துரைமுருகன், பாலு மரியாதை

பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோர் மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பெரியார் திடல், கோபாலபுரம் இல்லம், பேராசிரியர் க.அன்பழகன் இல்லம் ஆகியவற்றிற்கும் சென்று மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க: ’திமுக பொதுக்குழுவில் பில்டப்’ - அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.