ETV Bharat / city

நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

author img

By

Published : Jul 30, 2020, 3:44 PM IST

சென்னை: பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாத்து கொள்முதல் செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin

இது தொடர்பாக இன்று (ஜூலை30) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு போக விளைச்சலுக்கே போராடி திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாக கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமியின் அரசு.

பருவமழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அரசின் அலட்சியப் போக்கினால் கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதாலும், இந்நிகழ்வு நடந்துள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனோ பாதுகாப்புடனோ இருப்பதில்லை. எனவே, பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்ற வேண்டும் “ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.