ETV Bharat / city

திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

author img

By

Published : Jan 2, 2020, 3:43 PM IST

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் பல இடங்களில் திமுக வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்காமல் அதிமுகஅரசு சதி செய்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

complaint
complaint

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்படும் பணி முடிந்த பின்பும் வெற்றி விவரங்களை தாமதமின்றி வெளியிட சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகாரளிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோயம்பேடு அலுவலகதிற்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றும், 80 விழுக்காட்டிற்கும் மேல் முன்னணியிலும் உள்ளது. இதைத் தடுக்க ஆளுங்கட்சியான அதிமுக, அதிகாரிகளின் துணைக்கொண்டும், காவல் துறையினரின் துணைக்கொண்டும் திட்டமிட்டு சதி செய்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் பல இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளன. அங்குள்ள கொளத்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் பெற்ற வெற்றியை முறையாக அறிவிக்காமல், வேறு சில இடங்களில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அம்மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் மைத்துனரான வெங்கடேசன் அனைத்து அதிகாரிகளையும் மிரட்டி இச்செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், திண்டுக்கல், மீஞ்சூர், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தொகுதியான தேனி மாவட்டத்தின் போடி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதேபோல், தொடர்ந்து பல இடங்களில் ஆளுங்கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறது. இதுபற்றிய அனைத்து புகார்களையும் ஆணையரிடம் கொடுத்துள்ளோம். திமுக பெறும் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெற்றியைத் தடுக்க திட்டமிடுகின்றனர். இதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும் துணை போகிறது. அதிமுக அரசின் இந்த அநீதிக்கு எதிராக சட்டரீதியாகவும், போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவு செய்ய உள்ளோம் ” என்றார்.

திமுக வெற்றியைத் தடுக்க அதிமுக, தேர்தல் ஆணையம் சதி - மு.க. ஸ்டாலின்

இதையும் படிங்க: ரூ.14 லட்சத்திற்கு ஏலம்... கானலாய்போன கவுன்சிலர் கனவு...! தேர்தலில் மக்கள் அளித்த அதிர்ச்சித் தீர்ப்பு

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.01.20

திமுகவின் வெற்றியை அறிவிக்காமல் அதிமுக அரசின் அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து சதி செய்கிறார்கள்... ஸ்டாலின் பேட்டி..

நடைபெற்று முடிந்த ஊராகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தேர்தல் நடைபெற்ற 27மாவட்டங்களில் நடந்து வருகிறது. இவற்றில் சில மாவட்டங்களில் குறிப்பாக சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் பல்வேறு பதவியிடங்களுக்கு வெற்றி பெற்றும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது. வாக்குகள் எண்ணப்படும் பணி முடிந்த பின்பும் வெற்றி விபரங்களை தாமதமின்றி வெளியிட சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் புகார் அளிக்க திமுக தலைவர் ஸ்டாலின் கோயம்பேடு அலுவலகதிற்கு வந்தார். புகார் மனுவை ஆணையரிடம் கொடுத்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, அதிமுக அரசின் அதிகாரிகளாக இருக்கும் தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் பல மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை தடுக்க முயல்கிறார்கள். சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அறிவிக்கப்பட வேண்டிய வெற்றி விபரங்களை அறிவிக்க மறுக்கிறார்கள். சேலம் மாவட்டம் குளத்தூர் பகுதியில் திமுக வெற்றி பெற்றதை அறிவிக்க மறுக்கின்றனர். எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும் இதயே கடைபிடிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் இதே நிலைதான்.. துணை முதல்வரின் மாவட்டமான தேனி மாவட்டத்தில் பல இடங்களில் திமுக வெற்றி பெற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. வந்தவாசியிலும் இதே நிலை. தொடந்து பல இடங்களில் ஆளும் கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. அனைத்து புகார்கள் குறித்தும் ஆணையரிடம் கொடுத்துள்ளோம். திமுக அபார வெற்றி பெற்று வருகிறது, இதபை பொறுத்துக்கொள்ள முடியாமல் வெற்றியை தடுக்க திட்டமிடுகின்றனர். அதிமுக அரசின் இந்த அயோக்கியத் தனத்தை சட்டரீதியாக நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளோம். இந்த அநீதிக்கு எதிராக தமிழகத்தில் மட்டுமல்லாம் நாடு முழுமையாக போராட்டம் நடத்துவது குறித்தும் திட்டமிட உள்ளோம் என்றார்...

tn_che_05_dmk_President_Stalin_byte_at_election_office_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.