முன்னாள் திமுக அமைச்சர் ரகுமான் கான் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) காலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கம்பத்தில் பிறந்த அவர், திமுக ஆட்சியிலிருந்தபோது தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1977ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினரான ரகுமான் கான், தொடர்ந்து 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக வென்றவர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வீடு திரும்ப சிறப்பு பிரார்த்தனை!