ETV Bharat / city

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் - ஸ்டாலின் - Citizenship Amendment Act

சென்னை: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தவுள்ள பேரணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

stalin on caa, ஸ்டாலின்
stalin on caa
author img

By

Published : Dec 18, 2019, 6:19 PM IST

இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசுகையில், "மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த, திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வருகின்ற 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காலை 10 மணி அளவில் சென்னையில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், "குடியுரிமை சட்டம் எதிர்ப்பு பேரணி" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை சட்டம் அமைந்துள்ளது. இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் விடுப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து கேள்வியெழுப்பும் வகையில் இப்பேரணி நடைபெறும்.

மேலும் அதிமுக, பாமக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரித்து வாக்கு செலுத்திய காரணத்தினால்தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழின துரோகிகளான அவர்களை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

ஸ்டாலின் பேட்டி

தொடர்ந்து அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை மோடி, அமித்ஷா என்ன கூறுகிறார்களோ அதனை அப்படியே அடிபணிந்து ஏற்றுக்கொள்வார். எனவே அவர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கருத்து கூறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

திமுக பேரணி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அகில இந்திய அளவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தது என்பது குறித்து பேசி விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று ஆலோசித்து முடிவு எடுத்துள்ளோம்.

மேலும், கமல்ஹாசன் தன்னிடம் தொலைபேசியில் பேசியபோது, இது திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் என தெரிவித்ததாக கூறிய ஸ்டாலின், தேவைப்பட்டால் கட்சிக்கு அப்பாற்பட்டு இதே போல் கூட்டம் நடத்தினால் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

ரஜினி இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அதை நீங்கள்தான் கேட்க வேண்டும். நான் கருத்து கூற முடியாது என ஸ்டாலின் பதிலளித்தார்.

Intro:Body:இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசுகையில், "மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வருகின்ற 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காலை 10 மணி அளவில் சென்னையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், "குடியுரிமை சட்டம் எதிர்ப்பு பேரணி" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

நாடின் அமைதியை சீர் குலைக்கும் வகையில் குடியுரிமை சட்டம் அமைந்துள்ளது. இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் விடுப்பட்டிருப்பது ஏன் என்பதில் அடிப்படையில் இந்த பேரணி நடைப்பெறும்.

மேலும் அதிமுக, பாமக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரித்து வாக்கு செலுத்திய காரணத்தினால் தான் இந்த சட்டம் ஏற்றப்பட்டுள்ளது. எனவே இவர்கள் தமிழின துரோகிகளாக அடையாளம் கட்டப்பட்டுள்ளனர். நிச்சியமாக தமிழினம் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், முதல்வர் பழனிச்சாமி பொருத்தவரை மத்திய அரசும், மோடி, அமித்ஷா என்ன கூறுகிறார்களோ அதனை அப்படியே அடிப்பனிந்து ஏற்றுக்கொள்வார்கள். எனவே முதல்வர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கருத்து கூறுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.

திமுக பேரணி நிச்சியமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. அகில இந்திய அளவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என தெரிவித்தார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை பற்றி பேசி விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று ஆலோசித்து முடிவு எடுத்துள்ளோம்.

கமல் ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். நான் அவரிடம் தெளிவாக இது திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் என தெரிவித்தேன். தேவைப்பட்டால் கட்சிக்கு அப்பாற்பட்டு இதே போல் கூட்டம் நடத்தினால் அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்படும்.

மேலும் இந்த பேரணிக்கும் ஊடகம் வாயிலாக கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க அழைப்பு விடப்படுகிறது என தெரிவித்தார்.

ரஜினி இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது பற்றி பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் கேட்க வேண்டும்..நான் கருத்து கூற முடியாது என தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.