சென்னை: பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், கழக வேட்பாளர்களை எதிர்த்தும் - தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் கிழக்கு பகுதி, 7-ஆவது வட்டச் செயலாளர் பி.ஆதிகுருசாமி - மாதவரம் வடக்கு பகுதி, 23-ஆவது வட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் என்.மேனகா நித்யானந்தம், 23-ஆவது வட்டச் செயலாளர் என்.சரவணன் - திருவொற்றியூர் மேற்கு பகுதி, 2-ஆவது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி சந்தோஷ்குமார் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கப்படுகின்றனர்.
மாதவரம் தெற்கு பகுதி, 25-ஆவது வட்ட பிரதிநிதி பி.லோகநாதன் செங்குன்றம் பேரூர்க் கழகம், 3-ஆவது வார்டைச் சேர்ந்த இலக்கிய அணி அமைப்பாளர் கே.ராஜேந்திரன், 8-ஆவது வார்டு துணைச் செயலாளர் எஸ்.முனிகிருஷ்ணபாபு, 14-ஆவது வார்டு, மாவட்ட கலை, இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் க.கு.இலக்கியன்,
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 92-ஆவது வட்டத்தைச் சேர்ந்த கே.நீலகண்டன், 144-ஆவது வட்டத்தைச் சேர்ந்த பகுதி துணைச் செயலாளர் எம்.எம்.சீதாபதி, 147-ஆவது வட்டத்தைச் சேர்ந்த பகுதி பிரதிநிதி ப.ரமேஷ்காந்தன் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் வடக்கு பகுதி, 158-ஆவது வட்டத்தை சேர்ந்த மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பெருமாள், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திருமதி கிரிஜா பெருமாள் - தாம்பரம் நகரம், 50-ஆவது வார்டைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி இரா.செல்வகுமார் - செம்பாக்கம் நகரம், 1-ஆவது வார்டு செயலாளர் ஜெயபிரதீப் சந்திரன் ஆகியோரும் தற்காலிமாக கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கப்படுகின்றனர்.
விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் நகரம், 28-ஆவது வார்டு செயலாளர் வடிவேல் பழனி - விக்கிரவாண்டி பேரூர், 9-ஆவது வார்டைச் சேர்ந்த பேரூர் துணைச் செயலாளர் சு.வீரவேல், 6-ஆவது வார்டைச் சேர்ந்த பேரூர் பொருளாளர் ஜி.சேகர்; திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் விவிஜி.காந்தி மற்றும் திருமதி வேலம்மாள் - திருப்பூர் தெற்கு மாநகர உள்ளிட்ட 56 பேர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் விநியோகம்