ETV Bharat / city

‘சொந்த காசில் சூனியம் வைக்கும் தேமுதிக’ - சுதீஸ் பதிவுக்கு செந்தில் குமார் எம்பி காட்டம்! - dr senthilkumar mp tweet

அடுத்தாண்டு(2021) நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகான புகைச்சல் தற்போதே தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் தொண்டர்களிடத்தில் கூட்டணி குறித்து இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இச்சூழலில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கேலிச் சித்திரம், பிற கட்சி தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுதீஸ் பதிவுக்கு செந்தில் குமார் எம்பி காட்டம்

author img

By

Published : Sep 3, 2020, 11:20 AM IST

சென்னை: தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கேலிச் சித்திரம், பிற கட்சி தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கிறது தேமுதிக. ஆனால், ”கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துவருகிறார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே. ஆனால், தை மாதத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கேப்டன் அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்.

எப்பொழுதுமே தனித்து போட்டியிட்டு களம் கண்ட இயக்கம் தே.மு.தி.க. அதன் பின்னர் கூட்டணிக்குச் சென்றிருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதுவரை பொறுத்திருந்து பாருங்கள். அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அ.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் இருக்கிறது.

DMK MP responds for DMDK Sudhish opinion
எல்.கே. சுதீஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கேலிச் சித்திரம்

இவ்வேளையில், மக்கள் எடுக்கும் முடிவே ஆட்சியைத் தீர்மானிக்கும். நிறையும், குறையும் கலந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால் ஸ்டாலின் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். ரஜினி, கட்சி ஆரம்பித்த பின்புதான் அவருடன் கூட்டணியா என்பது குறித்து கருத்து சொல்ல முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இச்சூழலில் தேமுதிக துணை செயலாளர், தனது முகநூல் பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் விஜயகாந்த் நடுவில் நிற்க, மஞ்சள் துண்டு தோளில் போட்டவர் (திமுக), கருப்பு சட்டை போட்டவர், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட நிறைய பேர் விஜயகாந்தை சுற்றி, கீழே விழுந்து கும்பிடுகிறார்கள். இந்த கேலிச் சித்திரத்துக்கு திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பதிவை தன் முகநூல் பக்கத்திலிருந்து சுதீஷ் நீக்கியுள்ளார்.

  • சிலர் அழிவுக்கான தங்கள் பாதையை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

    இதற்கு சுதீஷ் மன்னிப்பு கேட்டு அவர் FB பக்கத்தில் இந்த பதிவை நீக்கவேண்டும்.

    சுயமரியாதை தன்மானம் மிக்க தொண்டர் ஒருபொழுதும் இதனை ஏற்க மாட்டார்கள்.😡 pic.twitter.com/FsjJak5kBz

    — Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) September 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், “சிலர் அழிவுக்கான தங்கள் பாதையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதற்கு சுதீஷ் மன்னிப்பு கேட்டு அவர் முகநூல் பக்கத்தில் இருந்து பதிவை நீக்கவேண்டும். சுயமரியாதை தன்மானம் மிக்க தொண்டர் ஒருபொழுதும் இதனை ஏற்க மாட்டார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்து.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.