ETV Bharat / city

திமுக எம்.பி. ரமேஷ் ஜாமீன் மனு: சிபிசிஐடி விளக்கம் அளிக்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிசிஐடி நாளை (நவம்பர் 17) விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Nov 16, 2021, 4:29 PM IST

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார்.

செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பாத தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், திமுக எம்.பி. ரமேஷ், அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் தான் மரணத்திற்கு காரணம் எனவும், தந்தையின் உடலில் பல ரத்த காயங்கள், அடித்து துன்புறுத்தி அடையாளங்கள் இருந்ததாகவும் கூறி, கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு பின் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு திமுக எம்.பி. ரமேஷ் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

விசாரணைக்குப் பின் கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனக்கு எதிராக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாகவும், கடலூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கட்சி வேட்பாளர் தோல்வியடைந்ததால், அரசியல் பழிவாங்கும் விதமாக புகார்தாரரை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, தற்கொலை வழக்கை கொலை வழக்கு என பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எம்.பி.யாக பதவி வகிப்பதால் தனக்கு ஜனநாய கடமைகள் இருப்பதாகவும், நீரழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஜாமீன் கோரியுள்ளார். விசாரணையையோ, சாட்சிகளையோ கலைக்கப் போவதில்லை எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுவுக்கு புதன்கிழமை (நவ. 17) விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: முந்திரி ஆலை தொழிலாளி கொலை: திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.