ETV Bharat / city

பாஜகவின் அடிமை அதிமுக - தயாநிதி மாறன் கடும் விமர்சனம் - குடியுரிமைச் சட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததால் ஏற்படும் வன்முறைகளுக்கு மோடி, அமித் ஷாவே பொறுப்பேற்க வேண்டுமென தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

protest
protest
author img

By

Published : Dec 17, 2019, 2:27 PM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான திமுகவினர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பாஜக அரசுக்கும், அதிமுக அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், ' பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்தால் பாஜக, தனது தேர்தல் அறிக்கையின்படி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி தற்போது குடியுரிமைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். தேர்தல் அறிக்கையில் கிறிஸ்தவர் என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால், சட்டத் திருத்தம் கொண்டுவந்த போது கிறிஸ்தவர்களை இணைத்துள்ளனர். ஏனென்றால், கிறிஸ்தவர்கள் இணைக்கப்படவில்லை என்றால் அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகளுக்கு மோடி டூர் செல்ல முடியாது. இஸ்லாமியர்களை ஒழிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். நிச்சயமாக அது நிறைவேறாது.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த மசோதாவே நிறைவேறியிருக்காது. அதேபோல் அதிமுகவை கடுமையாக சாடிவந்த அன்புமணி, கூட்டணி தர்மம் என்ற பெயரில் ஆதரவாக வாக்களித்துள்ளார். மேலும், தமிழகத்தில் விவசாயிகள் வறுமையில் இருக்கும் போது ஒரே ஒரு விவசாயி மட்டும் சென்றத் தேர்தலில் 500 கோடி வசூல் செய்துள்ளார். அவர்தான் மருத்துவர் ராமதாஸ் ' என்று கூறினார்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து சென்னையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், ' குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் ஆட்சியாளர்கள் பதிலளிக்கவில்லை.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உள்நோக்கத்துடன் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதனால் நாட்டில் பெறும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் தான் வன்முறைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

அதிமுக பாஜகயின் அடிமைக் கட்சி. அவர்கள் பாஜக இடும் கட்டளையை நிறைவேற்றுவார்கள். இச்சட்டத்திற்கு ஆதரவாக இருப்பதால் அதிமுக அரசு தமிழ்நாடு மக்கள், ஈழத்தமிழர்கள் என அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது வெட்கக் கேடு ' என விமர்சித்தார்.

தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய சென்னை

இதையும் படிங்க: குடியுரிமை மசோதா திரும்பப் பெறப்படும்வரை போராட்டங்கள் பற்றி எரியட்டும்; சென்னையில் சூளுரை!

Intro:

Body:Visuals

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.