சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய மாதவரம் சுதர்சனம்," மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒரு பெருந்தலைவர், நமக்கெல்லாம் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா, அவருடைய மறைவின் போது எல்லோரும் கண்கலங்கினார்கள். நாமும் கண் கலங்கினோம். ஆனால், அவருடைய மரணத்தில் உள்ள மர்மம் தற்போது வரை நீடித்து வருகிறது" என குறிப்பிட்டார்.
குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி," அதற்கு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் இவற்றை சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது. எனவே, அவை குறிப்பிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம் பேசியதை நீக்க வேண்டும்" என பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், குற்றவாளிகளையோ, குற்றம் சாட்டப்பட்டவர்களையோ அவர் குறிப்பிட்டு பேசவில்லை. எனவே, அவர் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
இதையும் படிங்க: கோடநாடு விவகாரம் - முதலமைச்சர் Vs எதிர்க்கட்சித் தலைவர்