தற்போது சென்னை - ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கு.க. செல்வம், 1997இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வி.ஐ.பி தொகுதியாக கருதப்படும் ஆயிரம் விளக்கில் நின்று வெற்றி பெற்றதின் மூலம் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார்.
திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கு.க. செல்வம் திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில், அப்பதவி சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக, அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், பாஜவுக்குச் செல்லலாம் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று(ஆக.4) மாலை 4.30 மணிக்கு டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கு.க. செல்வம் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து திமுக சார்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை. மறுபுறம் தமிழ்நாடு பாஜக தரப்பில் இதுகுறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் வரவில்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு: பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்!