அரவக்குறிச்சி, ஒட்டப்பிடராம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
அதனையடுத்து அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், ஒட்டப்பிடாரத்தில் சண்முகையாவும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும் திமுக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
இந்நிலையில், நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் ஐ.பெரியசாமி, ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் கே.என்.நேரு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.