ETV Bharat / city

கே.எம். காதர் மொய்தீன் மனைவி காலமானார்: ஸ்டாலின் இரங்கல்! - கே.எம் காதர் மொஹிதீனின் மனைவி லத்தீபா பேகம் மரணம்

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனின் துணைவியார் லதீஃபா பேகம் மறைவிற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

latheepa begum death
author img

By

Published : Oct 30, 2019, 10:05 PM IST

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனின் துணைவியார் லதீஃபா பேகம் இன்று இயற்கை எய்தியதையடுத்து, திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனின் துணைவியார் லதீஃபா பேகம் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு நான் மிகவும் வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் திருச்சி செல்லும் போதெல்லாம், அவர்களின் உடல் நலம் குறித்து விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அம்மையார் அவர்கள் என்னைப் பார்த்தவுடன், 'உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?' என்று, முந்திக் கொண்டு எனது உடல்நலனை அன்புடன் விசாரிப்பார்கள். அத்தகையதோர், அன்பில் உருவான அம்மையார் லதீஃபா பேகத்தின் மறைவு எனக்குப் பெரும் துயரம் அளிப்பதாகும்.

தமது பொதுவாழ்வில் மிகவும் உறுதுணையாக இருந்த, துணைவியார் லதீஃபா பேகத்தை இழந்துவாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் லதீஃபா பேகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், "சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் நாட்டில் ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்டவைகளை பாதுகாத்திடவும் அரும்பணியாற்றிவரும் கே.எம். காதர் மொய்தீன் அரசியல் பணிக்கும், குடும்ப வாழ்வுக்கும் உறுதுணையாக இருந்தவர் லதீஃபா பேகம். அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மறைந்த திமுக முன்னாள் எம்.பி-க்கு ஸ்டாலின் இரங்கல்!

Intro:Body:

'இரங்கல் செய்தி - செய்திக்குறிப்பு'

இன்று (30-10-2019), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களின் துணைவியார் திருமதி லதீஃபா பேகம் அவர்கள் மறைவெய்தியதையடுத்து, திருச்சியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து, கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்களின் துணைவியார் திருமதி லதீஃபா பேகம் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் திருச்சி செல்கின்ற நேரத்தில் எல்லாம், இல்லத்திலோ அல்லது உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் மருத்துவமனையிலோ, அவர்களின் உடல் நலம் விசாரித்தறிவதை வழக்கமாகக் கொண்டவன் நான். ஒவ்வொரு முறையும் அம்மையார் அவர்கள் என்னைப் பார்த்தவுடன், "உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது?" என்று, என்னை முந்திக் கொண்டு, எனது உடல்நலனை அன்புடன்  விசாரிப்பார்கள். அத்தகையதோர், அன்பே உருவான அம்மையார் லதீஃபா பேகம் அவர்களின் மறைவு எனக்கு பெரும் துயரம் அளிப்பதாகும்.

தமது பொது வாழ்வில் மிகவும் உறுதுணையாக இருந்த,  துணைவியார் லதீஃபா பேகம் அவர்களை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

**************

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  தேசியத் தலைவர் பேரா.கே.எம்.காதர் மொகைதீன் அவர்களது மனைவி லதீஃபா பேகம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கின் தேசிய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமிகு பேராசிரியர் கே.எம்.காதர் மொகைதீன் அவர்களது துணைவியார் லதீஃபா பேகம் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காகவும், நாட்டில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவைகளை பாதுகாத்திட அரும்பணியாற்றி வரும் திரு.கே.எம்.காதர் மொகைதீன் அவர்களது அரசியல் பணிக்கும், குடும்ப வாழ்வுக்கும் உறுதுணையாக இருந்தவர் திருமதி லதீஃபா பேகம் அவர்கள். அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது பிரிவால் வாடும் அன்புத் தலைவர் திரு. கே.எம்.காதர் மொகைதீன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்து அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.