இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், "ஆகஸ்டு 3ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்.
அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் அவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம்.
அதற்காக மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அலுவலர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும்.
மூன்று மாதங்களில் இந்த முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். எனவே ஓபிசி இடஒதுக்கீடு குறித்த சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி’- ஸ்டாலின் ட்வீட்