சென்னை மாநகராட்சியின் 6 நிலைக்குழுவின் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் மாமன்ற அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நிலைக்குழுத் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர்கள் தவிர வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வானதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ககன்தீப்சிங் பேடி அறிவித்தார். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலைக்குழு தலைவர்களுக்கு மாமன்ற அரங்கில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கணக்கு குழுத் தலைவர் - தனசேகரன், பொதுசுகாதார குழு தலைவர் - சாந்தகுமாரி, கல்விக்குழுத் தலைவர் - விசுவநாதன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் - சர்பஜெயாதாஸ் நரேந்திரன், நகரமைப்பு குழுத்தலைவர் - இளைய அருணா, பணிகள் குழுத் தலைவர் சிற்றரசு ஆகியோர் நிலைக் குழுத்தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பின்னர், மறைமுக தேர்தல் நிகழ்வுகளை முடித்து வைத்து அவை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் ககன்தீப்சிங்பேடி அறிவித்தார்.
இதையும் படிங்க: உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் வருத்தம்