ETV Bharat / city

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Feb 25, 2020, 10:37 AM IST

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DMK general secretary anbazhagan hospitalized

திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியில் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியிலில் இருந்து ஒதுங்கி, ஓய்வு எடுத்துவருகிறார். திமுக பொதுச்செயலாளர் என்ற பணியை மட்டும் அறிக்கைகள், அறிவிப்புகள் மூலம் செய்துவருகிறார்.

அன்பழகனுக்கு நேற்றிரவு, திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் நேற்றிரவு திமுக தலைவர் ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

சிகிச்சைக்குப் பின், விரைவில் அன்பழகன் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தருமபுரி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.