சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (செப். 9) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனர். மேலும் பொதுக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கிழ்வருமாறு
திமுக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
- திமுக பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள துரைமுருகன், பொருளாளராக தேவாகியுள்ள டி.ஆர்.பாலு, திமுக துணை பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ள க.பொன்முடி மற்றும் அ.ராசாவிற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம். நான்கு நபர்களின் சாதனைகளை வாசித்தார் டி.கே.எஸ்.இளங்கோவன்
- பேரிடர் காலங்களில் உழைத்து வரும் திமுகவினருக்கு பாராட்டு. மேலுன் கரோனா காலத்தில் சீரிய உதவிகள் செய்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு. முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டுகள்
- அருந்ததியினர் சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு சட்டம் அரசு இதழில் வெளியிட்டு அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
- மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தேவை என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதை பெற்று கொடுத்த ஸ்டாலினுக்கு பாராட்டு
- உள் இடஒதுக்கீடு செல்லும் குறுக்கீடு செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரம் இல்லை.
- இந்திய குடிமை பணிகள் தேர்வு - முன்னேறிய பொருளாதாரம் பின்தங்கிய 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்று கொடுத்த சமூக அநீதி களைத்திட நடவடிக்கை தேவை - கண்டனம்
- புதிய தேசிய கல்விக் கொள்கை - கன்டனம்
- புதிய சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை திரும்ப பெற வேண்டும்.
- அதிமுக அரசின் ஊழல்களுக்கு பாஜக பாதுகாவலராக உள்ளவர்களுக்கு கண்டனம்.
- ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் நீதி வேண்டும்.
- கரோனா காலத்தில் நெருப்பாக தோல்வி அடைந்துள்ள அதிமுக அரசுக்கு கண்டனம். ஊழல் அமைச்சர்கள் சட்டபூர்வமாக பதில் சொல்லும் நிலை வரும் என்ற எச்சரிக்கை
- திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பு ஏற்க சூளுரை ஏற்போம்.
- விவசாய விரோத கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்யவேண்டும்
- 2021 இறுதிக்குள் திமுக உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். அது வரை பொறுப்பில் உள்ளவர்கள் நீடிப்பார்கள். கரோனா பாதிப்பால் 2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு.