ETV Bharat / city

திமுக பிரமுகர் கொலை வழக்கு; 5 பேரையும் காவலில் விசாரிக்க அனுமதி!

author img

By

Published : Apr 9, 2022, 11:09 AM IST

திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர்களை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக பிரமுகர் கொலை வழக்கு: குற்றவாளிகளை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் ஏப்ரல் 3ஆம் தேதி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பான காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், போஸ்டர்கள் ஒட்டுவதில் அதிமுக, திமுகவினருக்கு இடையே விரோதம் இருந்ததாகக் கூறப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த அதிமுக பிரமுகர் கணேசன், தினேஷ், கார்த்தி, குமரேசன், இன்பா ஆகிய ஐந்து பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஏப்.4ஆம் தேதி சரணடைந்தனர்.

நீதிமன்றத்தில் சரணடைந்த ஐந்து பேரையும் விசாரணைக்கு அனுமதிக்கக் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எஸ்பிளனேட் காவல் துறையினர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அதிமுக பிரமுகர்கள் ஐந்து பேரையும் ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்பிளனேட் காவல் துறையினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.