ETV Bharat / city

ஹெச். ராஜாவிற்கு வக்கீல் நோட்டீஸ்! - பாஜக

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இழிவாகப் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

case
case
author img

By

Published : Dec 31, 2019, 7:52 PM IST

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கடந்த 25ஆம் தேதி வெளியான தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மூத்த வழக்கறிஞர்களை மிகவும் இழிவாக விமர்சித்து பேட்டி அளித்ததாகவும், எனவே அதற்கு மன்னிப்புக் கேட்க, திமுக தேர்தல் பணிக் குழுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எச். ராஜாவிற்கு திமுக அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்

அதில், ’குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மு.க. ஸ்டாலின், மத வெறியைத் தூண்டிக் கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார்’ என ஹெச். ராஜா தெரிவித்திருப்பதுடன், மூத்த வழக்கறிஞர்களையும் 'அறிவிலிகள்' எனக்கூறி வார்த்தைகளால் அவதூறு செய்துள்ளார். எனவே, இதற்கு 15 நாட்களுக்குள் அவர் மற்றும் அவர் பேட்டியளித்த தனியார் நாளிதழ் ஆசிரியரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி சிவில் வழக்கு பதியப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’மோடியும் அமித்ஷாவும் மாற்றி மாற்றி பேசுகின்றனர்’

Intro:Body:பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு திமுக சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மூத்த வழக்கறிஞர்களை மிகவும் இழிவாக விமர்சித்து நாளிதழில் பேட்டி அளித்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தேர்தல் பணி குழு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டிசில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் மத வெரியை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் என எச்.ராஜா தெரிவித்திருப்பது எனக்கு மன வேதனை தந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த வழக்கறிஞர்களையும் 'அறிவிலிகள்' என அவர் கூறி வார்த்தைகளால் அவதூறு செய்துள்ளார். எனவே இதற்கு 15 நாட்களுக்குள் எச்.ராஜா, நாளிதழ் ஆசிரியர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி சிவில் வழக்கு பதியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.