ETV Bharat / city

கொங்கு மண்டலத்தில் உயர பறக்குமா திமுக கொடி! - சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு! - ஸ்டாலின்

சென்னை: அதிமுகவிற்கே சாதகம் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கொங்கு மண்டலத்தை தன்வசப்படுத்த திருச்சியில் நடத்தியது போன்ற பிரம்மாண்ட மாநாட்டை வரும் 28 ஆம் தேதி சேலத்திலும் நடத்துகிறது திமுக. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் மாநாட்டு மேடையை பகிர்ந்து கொள்ளும் மு.க.ஸ்டாலினின் கொங்கு கனவு நிறைவேறுமா?

dmk
dmk
author img

By

Published : Mar 25, 2021, 10:41 PM IST

11 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட சேலத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஒரு தொகுதி தவிர்த்து மற்ற அனைத்தையும் அதிமுக கைப்பற்றியது. அடுத்து வந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும், அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், சொல்லும்படியான இடங்களை அதிமுகவே பெற்றது. அதாவது, அங்குள்ள 20 பஞ்சாயத்து யூனியனில் 37 வார்டு உறுப்பினர் பதவிகளை அதிமுகவும், 18 திமுகவும், 13 பாமகவும் கைப்பற்றின. இப்படி, சேலம் மட்டுமல்லாமல் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம், திமுகவிற்கு எப்போதுமே நம்பிக்கையற்ற மண்டலமாகவே பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை சேலத்தை நம்பிய திமுக, அதன் பிறகு உறுதிமிக்க மாவட்டத் தலைமை இல்லாமல் திணறி வந்தது. மேலும், உட்கட்சி முரணும் அக்கட்சி அங்கு மேலும் வளர தடையாகவே பார்க்கப்பட்டது. ஆக, அதிமுக திமுக இரண்டையும் ஒப்பிடுகையில் அதிமுகவிற்கே கொங்கு இதுநாள் வரை பெரும் சாதகமாக இருந்திருப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் மிக அருகே வந்துவிட்டது. பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில், களம் திமுகவிற்கு சாதகமாக இருப்பதாகவே தெரிவித்துள்ளன. தெற்கு, மத்தி, வடக்கு, டெல்டா மண்டலங்களில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருந்தும், மேற்கில் அதாவது கொங்கு மண்டலத்தில் அத்தகைய நிலை இல்லை என்பதையும் கருத்துக்கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன. அங்கு அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக தலைமையை சற்று அதிகமாகவே யோசிக்க வைத்துள்ளது. இந்த யோசனை முன்பே திமுகவிற்கு இருந்ததால்தான், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி மகளிரணிச் செயலாளர் கனிமொழி என, கட்சியின் முன்னணியினர் பலரையும், சேலம் உட்பட கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தது. திமுக தலைவர் ஸ்டாலினும் மக்கள் கிராம சபை தொடங்கி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற பல்வேறு கட்ட பிரச்சாரத்தையும் சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் வீரியத்துடன் நடத்தினார்.

கொங்கை வலுப்படுத்த திமுக மும்முரம்!
கொங்கை வலுப்படுத்த திமுக மும்முரம்!

அதன்பிறகும் இத்தகைய கணிப்புகள் வந்துள்ளபடியால், எதிர்வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்களைப் பெற பல்வேறு யூகங்களை வகுத்துள்ளது திமுக. குறிப்பாக முதலமைச்சர் பழனிசாமிக்கு சொந்தமான சேலம் மாவட்ட தொகுதிகளை முழுமையாக கைப்பற்ற மும்முரமாக வேலை பார்த்து வருகிறது. ஆகையால், அதிமுகவிற்கு மைனஸ் என்று கருதப்படும், மீனவர்கள் மற்றும் நெசவாளர்கள் வாக்குகளை அறுவடை செய்ய காய் நகர்த்தி வருகிறது. மேலும், எட்டு வழிச்சாலை திட்டம் போன்றவற்றை எடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்தால், கொங்கு எனும் அதிமுக கோட்டையை தகர்க்கலாம் எனவும் திமுக எண்ணுகிறது. அதேவேளை, வன்னியர் சமூக மக்கள் அதிகம் வாழும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதும், வன்னியர்களுக்கான 10% உள் இடஒதுக்கீடு போன்றவையும் அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் தான், அண்மையில் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு நிகராக, சேலத்திலும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும், மற்றுமொரு பிரம்மாண்ட மாநாட்டை வரும் 28 ஆம் தேதி திமுக நடத்தவுள்ளது. மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தை தன்வசப்படுத்த இந்த மாநாடு பெரிதும் உதவும் என்றும் திமுக தலைமை நம்புகிறது.

ராகுல் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பு!

இதையும் படிங்க: தேர்தல் முடிந்தபின்பே கருத்துக் கணிப்பு: ஊடகங்களுக்கு கடிவாளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.