ஊரடங்கு உத்தரவால் அச்சு ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சு ஊடகங்களுக்கு சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும், அதற்கு துணை நிற்குமாறு பல்வேறு பத்திரிகை நிறுவன நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, 30 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், பத்திரிகையாளர்கள் வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகளான மத்திய அரசு அச்சுக்காகிதம் மீதான வரியைக் குறைக்கவேண்டும், அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும், காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் போன்றவற்றை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்த எம்.எல்.ஏ கருணாஸ்!