ETV Bharat / city

கரோனா நிவாரணம் வழங்கத் தடையை எதிர்த்த வழக்கு - நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்!

சென்னை: ஊரடங்கால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Apr 15, 2020, 7:43 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்குவது, 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக்கூறி சென்னை மாநகராட்சி ஆணையர் தடை விதித்து உத்தரவிட்டார். பின்னர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தடை விதிக்கப்படவில்லை என்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக சார்பில் பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் தினக்கூலிகளுக்கு உதவும் வகையில் உணவு, அத்தியாவசிப் பொருட்களை வழங்கி வருவதாகவும், அப்போது முறையாக சமூக இடைவெளி, முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசதியானவர்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதி அளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவு பொருட்களை வழங்குவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 130 கோடி மக்களின் தேவையை அரசால் மட்டுமே முழுமையாக அளிக்க முடியாது என்றும், உதவி தேவைப்படுபவர்களுக்கு மக்கள் உதவிபுரிய வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அம்மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்ததோடு, கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் அப்போது அவர் தாக்கல் செய்தார். மேலும், கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவிகளை வழங்கும் போது இரண்டு நாட்களுக்கு முன்பாக உரிய அனுமதி பெறவேண்டும் என்ற அறிவிப்பை ரத்து செய்து, இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்தால் போதுமென திருத்தி அமைக்க வேண்டும் எனவும் வில்சன் எடுத்துக் கூறினார்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இயற்கை பேரிடர் போன்று தற்போதைய நிலை இல்லை என்றும், ஆபத்தான கொடிய பேரிடராக கரோனா தொற்று உள்ளதால் அவ்வாறு உத்தரவிடப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் தன்னார்வலர்கள் உணவு வழங்கச் செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் எனவும் அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் அப்போது அவர் தாக்கல் செய்தார்.

எனவே, இதனால் கரோனா வைரஸ் தொற்றுக்கு மக்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால், அதனை அனுமதிக்கக் கூடாது என்றும், அரசுத் தரப்பில் நாளை பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள் இவ்வழக்கில் நாளை தீர்ப்பு அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி? - ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.