ETV Bharat / city

வேளாண் மண்டல சட்ட முன்வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!

சென்னை: வேளாண் மண்டல சட்ட முன்வடிவை தேர்வுக்குழுவிற்கு அனுப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவையில் இன்று வலியுறுத்தின. ஆனால், அக்கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்காததால் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

stalin
stalin
author img

By

Published : Feb 20, 2020, 4:44 PM IST

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவு இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து அக்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், "டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதை முழுமையாக நிறைவேற்ற நாங்கள் துணை நிற்போம். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு குரல் கொடுப்பார்கள்.

ஆனால், தற்போதுள்ள இந்த சட்ட முன்வடிவில் சட்ட சிக்கல்கள், சட்ட சங்கடங்கள், இடையூறுகளை எப்படி தளர்த்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். காவேரி டெல்டா பகுதி விவசாயிகளுடன் கலந்து பேசி, சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்த பிறகே இந்த சட்ட முன்வடிவை இயற்ற வேண்டும். அதற்காக தேர்வுக் குழுவை அமைத்து பேச வேண்டும் என்றோம். அதற்கு பதில் இல்லை “ என்றார்.

வேளாண் மண்டல சட்ட முன்வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது, “இந்த சட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தோம். சட்ட முன்வடிவில் ஏற்கெனவே இருக்கும் திட்டங்கள் தொடரும் என கூறியிருக்கிறார்கள். தற்போது 34 ஆலைகள் உள்ளதாகவும், அவை நிறுத்தப்படாது எனவும் சட்டத்துறை அமைச்சர் கூறுகிறார். மேம்போக்கான இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு பலன் தராது என்பதால் இதனை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அது ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்தோம்“ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘எம்எல்ஏ இடம் கொடுத்தால் நியாயவிலை கடை அமைத்து தருகிறோம்’ - செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.