ETV Bharat / city

விவசாயிகளுடன் நேரடியாக பேச மோடிக்கு திமுக கூட்டணி வேண்டுகோள்! - விவசாயிகளுடன் நேரடியாக பேச மோடிக்கு திமுக கூட்டணி வேண்டுகோள்

சென்னை: வாழ்வாதாரத்தை சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அவர்களிடம் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.

allaiance
allaiance
author img

By

Published : Nov 30, 2020, 7:07 PM IST

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கூட்டறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், “ டெல்லியை முற்றுகையிட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த மகத்தான பேரணியை மதிக்காமல் சர்வாதிகார போக்குடன் மத்திய பாஜக அரசு அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதிக்கிறது.

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரம் இல்லை என்று அடுக்கடுக்கான துரோகத்தை செய்து விவசாயிகளின் கண்களை பிடுங்கியுள்ள மோடி அரசு, தடியடி, கண்ணீர் குண்டு வீச்சு, பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை என அவர்களை ஒடுக்கிவிட கச்சை கட்டிக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

  • குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்!

    அவர்களின் உணர்வுகளைப் புரிந்து @PMOIndia பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்!#SpeakUpForFarmers pic.twitter.com/4WmtB6JUYg

    — M.K.Stalin (@mkstalin) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வாழ்வாதாரத்தை பறித்து கார்ப்பரேட்டுகளை களிப்புறச் செய்யும் மத்திய அரசின் தந்திரத்தை உணர்ந்தே, விவசாயிகள் தற்போது போராடி வருகின்றனர். எனவே, இனியாவது மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற்று, விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் “ எனக் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'விவசாயிகளுக்காகப் பேசுங்கள்' - அடக்குமுறைகளுக்கு எதிராக காங்கிரசின் பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.