காஷ்மீர் விவகாரம் குறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளை ஒருங்கினைத்து திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடித்து விட்டு விடுதலைச் சிறுத்தையின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் " ஜம்மூ - காஷ்மீர் மாநிலம் அனைத்து தொடர்புகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு ஓர் தீவாக ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த மாநிலத்திற்கு சென்று அங்கு உள்ள சூழ்நிலைகளை கண்டறிவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை அந்த மாநிலத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளோம்.
ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்திற்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமை ஒரு வரலாற்று துரோகம். நம்பி வந்தவர்களுக்கு நாம் இழைத்துள்ள மன்னிக்க முடியாத துரோகம். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச மீண்டும் கூடுவேம் என திமுக தலைவர் அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் இந்த விவகாரத்தில் அமைதிகாக்க கூடிய நிலையில், அகில இந்திய அளவில் திமுக தலைமையில் இந்த அனைத்து கட்சி கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது." என்றார்.