கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மக்கள் ஒன்று கூடாமல் இருக்க மத்திய அரசு மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில், சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் மணமக்களின் ரத்த சொந்தங்கள் மட்டும் கலந்துகொண்ட திருமண நிகழ்வு அரங்கேறியது.
தேமுதிக மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ஆர்.வேணு ராம் இல்லத் திருமண விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.

இத்திருமண நிகழ்வில் மணமக்களின் ரத்த சொந்தங்கள் சிலரும், கட்சி நிர்வாகிகள் சிலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர். நிகழ்வின் முடிவில் மணமக்கள் விமல்குமார்- கமலி, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் முகக்கவசம் அணிந்தவாறே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் இந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் முகக் கவசமும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா: எண்ணிக்கை 7ஆக உயர்வு