கடந்த சில நாள்களுக்கு முன் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக உள்ளதாகவும், வரும் 27ஆம் தேதி முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், அவர் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சுதீஷ் பரப்புரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.