ETV Bharat / city

இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு தே.மு.தி.க., தலைவர் வாழ்த்து! - சென்னை அண்மைச் செய்திகள்

திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளம் பெண் மேயருக்கு தே.மு.தி.க., தலைவர் வாழ்த்து

author img

By

Published : Dec 26, 2020, 4:18 PM IST

சென்னை: திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் பெண் ஆர்யா ராஜேந்திரனுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, 21 வயது இளம் பெண் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இது அனைத்து பெண்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய அடையாளமாகவும், அங்கீகாரமாகவும் நினைக்கிறேன். பலதுறைகளில் சாதனை படைத்து வரும் பெண்கள் அரசியலிலும், முத்திரை பதித்து வருவது வரவேற்கத்தக்கது.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்யா ராஜேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளம் வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவர், தன்னை ஒரு சிறந்த மேயராக நிரூபித்து, ஒட்டு மொத்த பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு தடை விதித்திருப்பது ஜனநாயக படுகொலை - எஸ்டிபிஐ நெல்லை முபாரக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.