தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்துக்கு செப்.22ஆம் தேதி லேசான அறிகுறியுடனான கரோனா பாதிப்பு இருந்தது. இதனையடுத்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதையடுத்து அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்.28ஆம் தேதி கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று உறுதியான நிலையில், செப்.29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர்கள் இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். ஏறேகனவே இன்று அவர்கள் இருவரும் வீடு திரும்புவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிகிச்சையில் நல்ல முன்னேற்றம்: வீடு திரும்பும் விஜயகாந்த், பிரேமலதா!