ETV Bharat / city

தேமுதிக தனித்துப் போட்டியிடவும் தயங்காது - பிரேமலதா அதிரடி - DMDK Treasurer

சென்னை: அதிமுக கூட்டணியில் உரிய மதிப்பு கொடுக்காவிட்டால் தேமுதிக 234 தொகுதியில் தனித்துப் போட்டியிடவும் தயங்காது எனவும், கூட்டணி குறித்தான முக்கிய அறிவிப்பை நாளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jan 30, 2021, 5:53 PM IST

தேமுதிக ஆலோசனைக் கூட்டம் அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 10.45 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதால் கூட்டணி குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம், எவ்வளவு தொகுதிகள் பங்கீடு கேட்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

தொடர்ந்து தேமுதிக கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சிகளில் இணைந்துவருவதால் கட்சி பலவீனம் அடைந்துவருவதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி இடம்பெற்றது.

தொடர்ந்து தற்போது பிரேமலதா விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் அதிமுக கட்சிக்கு எதிராகவும், சசிகலாவிற்கு ஆதரவாகவும் கருத்துகளைக் கூறிவருவது கூட்டணியில் மற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு வலு சேர்க்கும்விதமாக இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றால் தேமுதிக 234 தொகுதியில் தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மேலும் பாமக இல்லாத கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக தரப்பு பிரேமலதா விஜயகாந்தின் எந்தக் கருத்திற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதது அவர்களும் தேமுதிக கட்சியைக் கழற்றிவிடத்தான் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.