இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”வேலை வாய்ப்பை எதிர்பார்த்து படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் காத்திருக்கும் காலக்கட்டத்தில், அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. திராவிடர் கழகம் இந்த முடிவினை வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுப்பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணத்தில், வாய்ப்பில் மண்ணைப் போட்ட மாபெரும் தவறான முடிவு இதுவாகும். பதவி உயர்வை எதிர்பார்த்திருக்கும் பலருக்கும் இந்த ஓய்வு வயது உயர்வு, ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கும் என்பதில் அய்யமில்லை. புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாவிட்டாலும், காலியாகிய புதிய வாய்ப்புகள் மூலம் வருவதையும் இப்படி கதவடைக்கலாமா?
இளைஞர்களும், சமூகநீதியில் நம்பிக்கையுள்ள மற்ற பலரும், இதுபற்றி உரத்து சிந்திக்க வேண்டும். மே 17 ஆம் தேதிக்குப் பின்னர் திராவிடர் கழகம் சார்பில் அறப்போராட்டங்களை நடத்துவது தவிர்க்க இயலாதது“ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள் திறக்க வேண்டும்’ - வைகோ