ETV Bharat / city

தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவில் சுணக்கம்!

வழக்கமாக தீபாவளி காலத்தில் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் புறப்பட்டுச் செல்வர். இதனால் தீபாவளியை ஒட்டிய விடுமுறை நாள்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (SETC) கூட்டம் அலைமோதும். ஆனால் இத்த முறை பண்டிகைக்கான அறிகுறிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

diwali special buses in tamilnadu
diwali special buses in tamilnadu
author img

By

Published : Oct 22, 2020, 9:44 PM IST

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவில் மந்த நிலை நிலவுகிறது.

நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், 30 நாட்களுக்கு முன்பே அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியும். கடந்த ஆண்டுகளில், இதே காலகட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து முன்பதிவுகள் நடைபெற்ற நிலையில், தற்போது நான்காயிரம் முன்பதிவுகள் கூட நடைபெறவில்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தீபாவளியை முன்னிட்டு வழக்கமான பேருந்துகளுடன் மக்களின் தேவையை நிறைவு செய்ய கூடுதலாக நான்காயிரம் முதல் 4,500 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அலுவலர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை.

இது தொடர்பாக பேசிய போக்குவரத்துக் கழக அலுவலர் ஒருவர், “தற்போது கரோனா அச்சம் காரணமாக மக்கள் பயணிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. சாதாரண நாள்களில் சென்னையில் இருந்து 2,025 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது அவற்றில் 75 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் கூடுதலாக இரண்டாயிரம் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் தற்போது ஓடும் பேருந்துகளிலேயே 60 விழுக்காடு இருக்கைகள் தான் நிரம்புகின்றன. இதனால் பண்டிகை கால சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

முன்னதாக, பெருந்தொற்று பாதிப்பு காரணமாக சென்னையை விட்டு வெளியேறிய மக்கள் பெரும்பாலானோர், அண்மைக் காலமாக மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் மக்கள் பயணம் செய்வதையும் குறைத்துள்ளனர். அதைப்போல் அதிகமாக சொந்த ஊர்களுக்குச் செல்லும் ஐடி ஊழியர்களும், தற்போது வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.

கல்லூரிகளில் விடுமுறை என்பதால் மாணவர்களும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் பண்டிகை காலத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் சிலர் நிதி நிலைமை காரணமாக முன்பதிவு செய்யாமல் உள்ளனர்.

இதனால் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் முன்பதிவு செய்பவர்களின் நிலை, பேருந்துகளுக்கான தேவை குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். அதற்குள்ளாக போக்குவரத்துத் துறை அமைச்சர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி சிறப்பு பேருந்துகள் குறித்து முடிவு எடுப்பார்” என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.