ETV Bharat / city

முதலமைச்சர் மீதான புகாரில் முகாந்திரமில்லை - லஞ்ச ஒழிப்புத்துறை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தஞ்சாவூர் நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மீது திமுக அளித்த புகாரில் முகாந்திரம் இல்லாததால், புகார் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

palanisami
palanisami
author img

By

Published : Jun 16, 2020, 2:53 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”ஆண்டுதோறும் வழக்கமாக பிறப்பிக்கப்படும் டெண்டர் போல் அல்லாமல், இந்த டெண்டர் ஐந்தாண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளது. டெண்டர் கோரும் போது ஓராண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். அந்த வகையில் இந்த டெண்டருக்கு 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும். ஆனால், தற்போது 800 கோடி ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதலமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்“ என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் டெண்டரில் யாரும் பங்கேற்காத நிலையில் ஊழல் நடந்துள்ளதாக அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், திமுகவின் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை முடிவெடுத்து விட்டதாகவும், அது தொடர்பான புகாரை முடித்து வைத்தது குறித்து ஆர்.எஸ். பாரதிக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டெண்டரே ஒதுக்காத போது எப்படி ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியுமென கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என ஆர்.எஸ். பாரதிக்கு அறிவுறுத்தினார். லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் குறித்து ஆர்.எஸ். பாரதியிடம் விளக்கம் பெற்று அளிப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியதால் வழக்கு ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பல்வேறு துறை புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.