இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ” மார்ச் மாதம் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.7.2020 (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இதனையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களையும், ’www.dge.tn.gov.in’ என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி, தங்களது பள்ளிகளுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கும் தேதி, இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி மற்றும் வழிமுறைகள் குறித்த விவரம் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் எப்படி? காணொளி வெளியீடு!