ETV Bharat / city

எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த இயக்குநர் தருண்கோபி! - Director Tarun Gopi

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நடிகரும் இயக்குநருமான தருண்கோபி தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

director-tarun-gopi
director-tarun-gopi
author img

By

Published : Aug 22, 2020, 11:12 AM IST

சென்னை கமலாலயத்தில் பாஜக அறிவுசார் பிரிவு சார்பில் "விநாயகரும் விருட்சமும்" என்னும் தலைப்பில் நேற்று (ஆக.21) விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்வில் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின்போது

மேலும் அவர்களுக்கு முருகன் விநாயகர் சிலைகளை வழங்கினார். அவருடன் பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் அர்ஜுன மூர்த்தி, கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதையடுத்து மற்றொரு நிகழ்வில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான தருண்கோபி பாஜகவில் இணைந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தருண்கோபி, "பாஜக ஆட்சியில் நாடு சிறப்பாக உள்ளது. தற்போது பாஜக தலைமையில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார்.

வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சியை பாஜக அமைக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார். தருண்கோபி காளை, திமிரு உள்ளிட்ட படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் தருண்கோபி

இதையும் படிங்க: கேல் ரத்னா விருது பெறும் வீரர் மாரியப்பனுக்கு எல். முருகன் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.