சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தனித்தனி பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளப்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆர்யா, நடிகை அதுல்யா ரவி, இயக்குநர் மகிழ்திருமேனி , இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, பிரபு சாலமன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கத்துடன், சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்தனர். இந்நிகழ்வில் பேசிய நடிகர் ஆர்யாவும், இயக்குநர் பிரபு சாலமனும் தடகளப் போட்டியில் பங்கேற்றவர்களை பார்க்கும் போது தங்களுக்கு புத்துணர்ச்சியும், பெருமகிழ்ச்சியும் கிடைத்துள்ளது என்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி, "விளையாட்டு வீரர்கள் தான் உண்மையான ரோல் மாடல்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியமான அனைத்து அம்சங்களும் அவர்களிடம் உள்ளது. உடலை உறுதியாக்கி கொள்வதன் மூலம்தான் மனதையும், மனோதிடத்தையும் உறுதியாக்கி கொள்ள முடியும். ஆகையால் இளைய தலைமுறையினர் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படியுங்க:
#BharatiyaJokeParty: நெட்டிசன்களை உசுப்பிவிட்ட நிதியமைச்சரின் ஒற்றை பேட்டி!