ETV Bharat / city

கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா? என்பதை கோயில்களின் ஆகமம் குறித்து முடிவு செய்ய நியமிக்கப்பட உள்ள குழு ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபாலீஸ்வரர் கோயிலிருந்து மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா?

author img

By

Published : Sep 2, 2022, 11:04 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக கூறி ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், புன்னைவனநாதர் சந்நிதியில் இருந்த மயில் சிலையின் அலகில் மலர் இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டு குடமுழுக்கின் போது, இச்சிலை மாற்றப்பட்டு, அலகில் பாம்பு உள்ள மயில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஆகம விதிகளுக்கு முரணானது எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் கோயில்களின் ஆகமம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டதைச்சுட்டிக்காட்டி, அந்த குழு, இந்த மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா என்பதை முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கோயில்களின் ஆகமம் குறித்த குழு, மயில் அலகில் மலர் இருந்தது என முடிவுக்கு வந்தால், அலகில் பாம்புடன் இடம்பெற்ற மயில் சிலையை ஆகம விதிகளின்படி மாற்றியமைக்க வேண்டும், பாம்பு தான் இருந்தது என்றால் சிலையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் நீண்டகாலமாக இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதால் ஆகம குழு இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன - காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.