ETV Bharat / city

கோயில்களின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு - High court Chennai

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து மனுவாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 1, 2021, 6:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை குழு மூலம் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் வரவு செலவுகளை வெளியாள்களை வைத்து தணிக்கை செய்ய சட்ட விதிகள் அனுமதிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அனைத்து கோயில்களின் வரவு செலவுகளைத் தணிக்கை செய்து மனுவாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 266 உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.