ETV Bharat / city

அண்ணா பல்கலையில் 2ஆம் ஆண்டில் நேரடி சேர்க்கை - polytechnic students direct entry to second year

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் வரும் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு
அண்ணா பல்கலைக்கழகம்
author img

By

Published : Jan 12, 2022, 11:59 AM IST

Updated : Jan 12, 2022, 12:21 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் சேராமல் காலியாக உள்ள பொறியியல் இடங்களில், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் நேரடியாக வரும் கல்வியாண்டு முதல் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்வதற்கான அனுமதி பெறப்பட உள்ளது.

புதிய நடைமுறை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதுவரை பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை நடத்தப்படவில்லை. முதல் முறையாக காலியிடங்களை நிரப்பும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேராததால் நான்கு ஆண்டுகள் காலியாக இருக்கும் இடங்கள் குறைக்கப்பட்டு தமிழ்நாடு மாணவர்கள் கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

பொறியியல் படிப்பில் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டுத்தோறும் முதலாம் ஆண்டில் ஏற்படும் காலிப்பணியிடங்களை இரண்டாம் ஆண்டில் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

பிற படிப்புகளுக்கு செல்லும் மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழகம்
2ஆம் ஆண்டில் நேரடி சேர்க்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேராமல் காலியாக இருக்கிறது.

கலந்தாய்வின் போது, முதலாம் ஆண்டில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள், பின்னர் மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பிறப் படிப்பில் சேர்வதற்கு செல்கின்றனர்.

இதனால் ஏற்படும் காலியிடங்களில் மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்படாமல் உள்ளனர். இதன் மூலம் பலக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கிறது. இதனால் பொறியியல் படிப்பில் மற்ற கல்லூரிகளிலும், தனியார் கல்லூரியிலும் மாணவர்கள் படிக்கும் நிலைமை உள்ளது.

ஆட்சிமன்றக் குழுவிற்கு அறிவுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகம்
2ஆம் ஆண்டில் நேரடி சேர்க்கை

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக்கல்லூரி 4, அரசு பொறியியல்கல்லூரி 10, அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி 13 ஆகியவற்றில் ஏற்படும் காலி இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரும், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளரும் கண்டறிய வேண்டும்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களில் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வது போல், அண்ணா பல்கலைக்கழகத்திலும் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கான அனுமதி வழங்குவதற்கு ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

காலியிடங்களின் எண்ணிக்கை

அண்ணா பல்கலைக்கழகம்
2ஆம் ஆண்டில் நேரடி சேர்க்கை

10 அரசு பொறியியல் கல்லூரிகளில் 2014-15ஆம் ஆண்டில் 429 இடங்களும், 2015-16ஆம் கல்வியாண்டில் 504 இடங்களும், 2016-17ஆம் கல்வியாண்டில் 568 இடங்களும், 2017-18ஆம் கல்வியாண்டில் 531 இடங்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 325 இடங்களும்,

2019-2020ஆம் கல்வியாண்டில் 489 இடங்களும், 2020-2021ஆம் கல்வியாண்டில் 693 இடங்களும் காலியாக இருந்தன. 2021-22 நடப்பு கல்வியாண்டில் 11 அரசுக் கல்லூரிகளில் 505 இடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் 2014-15ஆம் ஆண்டில் 324 இடங்களும், 2015-16ஆம் கல்வியாண்டில் 290இடங்களும், 2016-17ஆம் கல்வியாண்டில் 294 இடங்களும், 2017-18ஆம் கல்வியாண்டில் 284 இடங்களும், 2018-19ஆம் கல்வியாண்டில் 175 இடங்களும், 2019-2020ஆம் கல்வியாண்டில் 389 இடங்களும், 2020-2021ஆம் கல்வியாண்டில் 570 இடங்களும் காலியாக இருந்தன. 2021-22 நடப்பு கல்வியாண்டில் 421 இடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 13 உறுப்புக்கல்லூரிகளில் 2014-15ஆம் ஆண்டில் 1323 இடங்களும், 2015-16ஆம் கல்வியாண்டில் 1471 இடங்களும், 2016-17ஆம் கல்வியாண்டில் 1600 இடங்களும், 2017-18ஆம் கல்வியாண்டில் 1513 இடங்களும் காலியாக இருந்தன.

2018-19ஆம் கல்வியாண்டில் மேலும் மூன்று அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 16 உறுப்புக்கல்லூரிகளில் 2018-19ஆம் கல்வியாண்டில் 2181 இடங்களும், 2019-2020ஆம் கல்வியாண்டில் 3115 இடங்களும்,

2020-2021ஆம் கல்வியாண்டில் 3458 இடங்களும் காலியாக இருந்தன. 2021-22 நடப்பு கல்வியாண்டில் 2682 இடங்கள் காலியாக உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரியில் 363 இடங்கள் நடப்பு கல்வியாண்டில் காலியாக இருக்கிறது.

இதையும் படிங்க: Medical College Inauguration: 11 புதிய மருத்துவ கல்லூரிகள் -இன்று திறந்து வைக்கிறார் மோடி

Last Updated : Jan 12, 2022, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.